துணை முதல்வர் ஓபிஎஸ்சின் உடன் பிறந்த சகோதரரான ஒ.ராஜா நேற்று மதுரை
ஆவீன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மாவட்டசெயலாளரும், ஏம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் ஓ.ராஜாவுக்கு மாலை, சால்வை போட்டு வாழ்த்தினார்கள். இந்த
சந்தோஷம் தொடர்ந்து நீடிப்பதற்குள் மதியமே ஓ.ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் அதிரடியாக நீக்கினார்கள். இந்த விஷயம் அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திடீரென கட்சியின் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து தூக்கியதை கண்டு ஓ.ராஜாவும் அவருடைய ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
.
இது சம்பந்தமாக தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.ராஜாவின் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது.... சமீபகாலமாகவே அண்ணன் ஓபிஎஸ் ராஜா அண்ணணை மதிப்பதில்லை. தன் குடும்பத்தில் உள்ள மகன்களுக்குத்தான் அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாரே தவிர அந்த ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அதனாலதான் இந்த ஆவின் தலைவர் பதவியை போட்டு கொடுங்கள் என ராஜா கேட்டு இருக்கிறார் அதற்கு ஓபிஎஸ்சும் சரி என்று சொன்னதின் பேரில் போடி அதில் உள்ள பால் கூட்டுறவு தேர்தலில் போட்டியிட்டு இயக்குனராக வெற்றி பெற்றார். அதன் பின் திடீரென அண்ணன் ஓபிஎஸ் இப்போதைக்கு அந்த தலைவர் பதவி வேண்டாம். பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி அண்ணன் ராஜாவை நம்பவைத்து ஓபிஎஸ் ஏமாற்ற பார்த்தார். அதனாலதான் அண்ணன் ராஜா மற்ற இயக்குனர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அது பிடிக்காமல் தான் ஒரு சில அமைச்சரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் - இபிஎஸ் சேர்ந்து அண்ணனை கட்சியில் இருந்து திடீரென நீக்கிவிட்டனர். இருந்தாலும் பரவாயில்லை அண்ணன் ராஜாவின் நீண்ட காலம் ஆசையே ஆவின் தலைவர் பதவி தான். தற்போது அதிமுக கட்சியில் இருந்து தூக்கினாலும் அண்ணன் ஆவின் தலைவராகவே நீடிப்பார். அதற்கான மறைமுக வேலையில் ஈடுபட்டு வருகிறார். அதோடு அண்ணன் ராஜாவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதால் அதற்கு பழிக்குப்பழியாக கூடிய விரைவில் திண்டுக்கல்லில் உள்ள திமுக துணைபொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில் அண்ணன் ஒ.ராஜா தலைமையில் ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணைய போவதற்கான பேச்சுக்கள் நடந்து வருவதால் கூடிய விரைவில் அண்ணன் ஓ. ராஜா ஐ.பி. முன்னிலையில் திமுகவில் சேரப் போகிறார். அதன் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள ஓபிஎஸ்சின் செல்வாக்கும் ஒட்டுமொத்தமாக சரிய போகிறது என்று கூறினார்கள். அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சியினர் மற்றும் ஓபிஎஸ்சின் உறவினர்கள் மத்தியிலும் ஓ. ராஜா திமுகவுக்கு போகப் போகிறார் என்ற பேச்சு மாவட்டம் முழுவதும் பரவலாக ஒலித்துக் கொண்டு தான் வருகிறது.