தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடியை சந்தித்து புத்தாண்டு தினத்தன்று வாழ்த்து கூறியுள்ளார்கள். புத்தாண்டு அன்று காலையிலேயே துணை முதல்வரான ஓ.பி.எஸ். உற்சாகத்தோட எடப்பாடியை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து கொண்டதாக சொல்லப்படுகிறது. பிறகு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று தீவிரமாக டிஸ்கஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முன்புபோல் ஆளுங்கட்சி டோட்டலா ஜெயிக்க வாய்ப்பில்லை என்கிற கவலை வெளிப்பட்டிப்பதாக சொல்லப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் நேற்று தேர்தல் முடிவில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தும், அதிக செலவு செய்தும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போதுமான இடம் கிடைக்கவில்லை என்று எடப்பாடி கூற, அதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆறுதல் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இவரைப் போலவே, வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்களும் முதல்வருக்கு ஆறுதல் கூறியதாக சொல்லப்படுகிறது.
பின்பு அவர்களிடம் ஊரக தேர்தல் முடிவு அதிமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் நான்தான் வேட்பாளர்களைத் தேர்வு செய்வேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளார் எடப்பாடி. இதனால் தங்களது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்கலாம் என்று இருந்த அதிமுக முக்கிய புள்ளிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.