![Minister who distributed publications to explain the 100 day achievement ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/V820RrEEdjotrn0dHHNdMuWQnOOivgZppN5ANOAQUnk/1629528843/sites/default/files/inline-images/th-1_1595.jpg)
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக திமுக ஆட்சியின் நூறு நாள் சாதனையை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதனைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். சத்திரம் பேருந்து நிலையம் முதல் வி.என்.நகர் பகுதி வரை நடந்து சென்று இப்பிரசுரங்களை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
அந்தப் பிரசுரத்தில், கரோனாவிற்கான நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்பட்டது; மகளிருக்கு விலையில்லா பேருந்து பயண திட்டத்தை அறிவித்தது; பத்திரிகை, ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது; அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்கியது; செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நிவாரணத்தொகை அறிவித்தது உள்ளிட்ட திமுக அரசின் நூறுநாள் சாதனைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன், கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்டப் பொருளாளர் என். கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.