Published on 10/03/2019 | Edited on 10/03/2019

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார். மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவித்தார். விருப்ப மனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.