மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க ஜூன் 2022ல் நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் மேலும் 2 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மாநில கல்விக் கொள்கை குழுவில் காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் டி.ஃப்ரீடா ஞானராணி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். எதிர்காலத் தேவைகள், கனவுகள் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கென தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.