Skip to main content

வெளியானது பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்

Published on 14/03/2021 | Edited on 14/03/2021

 

 The BJP's first phase candidate list has been released

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு  20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் 05.03.2021-அன்று கையெழுத்தானது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது.

 

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, எல்.முருகன்-தாராபுரம், எச். ராஜா-காரைக்குடி, எம்.ஆர்.காந்தி-நாகர்கோயில், அண்ணாமலை -அவரக்குறிச்சி, வானதி ஸ்ரீனிவாசன்-கோவை மேற்கு, குஷ்பூ-ஆயிரம் விளக்கு என 6 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது பாஜக.

 

சார்ந்த செய்திகள்