![kumaraswamy yeddyurappa](http://image.nakkheeran.in/cdn/farfuture/VI0p5s01wsG0MiVYeTKV3caIwdr578kWF8MXMLhWoYo/1533347658/sites/default/files/inline-images/kumaraswamy%20yeddyurappa%2045000.jpg)
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க போதிய எண்ணிக்கையான 113 பெறவில்லை. 104 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த நிலையில் மேலும் தேவைப்படுவது 9 எம்எல்ஏக்கள்தான். பாஜகவின் மிகப்பெரிய நம்பிக்கையாக கருதப்பட்டது கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது. அதற்கு காரணம் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகள் முழுக்க பாஜகவின் ஆட்சி அதிகாரத்திற்குள் வந்தபோதும், தென்னிந்தியாவான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் பாஜக நுழைய முடியவில்லை.
ஏற்கனவே கர்நாடகாவில் சில மாதங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததால் இந்த தேர்தலில் தனது கணக்கை தென் மாநிலத்தில் துவங்க கர்நாடகாதான் வாசல் கதவு என நம்பி, இதற்காக அக்கட்சியின் தலைவர் அமித்ஷா முதற்கொண்டு பிரதமர் மோடி என பெரிய பட்டாளமே ஒரு மாதமாக கர்நாடகாவில் முகாமிட்டு பல்வேறு வேலைகளை செய்து வந்தனர். ஆனால் எல்லாமே பிரயோஜனம் இல்லாமல் போகுமளவுக்கு அதிகாரம் கையில் கிடைக்க வழியில்லாத நிலை உருவாகிவிட்டது. இதனை விடக்கூடாது என, இதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் பாஜக இறங்க வேண்டும் என டெல்லியில் இருந்து அறிவிப்பு வர, பேர பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பாக வெற்றி பெற்ற 37 பேரில் 15 பேரை வளைக்க பலகட்ட முயற்சிகளை தொடங்கியிருக்கிறார்கள். இதன்படி ஒரு எம்எல்ஏவின் தலைக்கு 50 சி என தொடக்க பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக போய்கொண்டிருக்கிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் 37 பேரில் 3ல் ஒரு பங்கு இழுத்துவிட்டால் அவர்களை தனிக்கட்சியாக்கி, பாஜகவுக்கு ஆதரவு நிலையை ஏற்படுத்தலாம் என்று முடிவு செய்துள்ளது. அதற்காகவே பாஜக முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடியூரப்பா கர்நாடக ஆளுநர் வஜ்ஜிபாய் வாலாவை சந்தித்து பெரும்பாண்மை பலன் எங்களுக்கே உள்ளது. இரண்டு நாள் கொடுங்கள் ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
மஜத தலைமை 50 சி என்ன ஆயிரம் சி பேசினாலும் எங்கள் 38 பேரில் ஒருவர் கூட மைனஸ் ஆக மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. பாஜக போட்டள்ள தூண்டிலில் மீன் சிக்குமா? சிக்காதா? என்பது கர்நாடகா முழுக்க பரபரப்பு ஏற்பட்டுள்ளது.