தூத்துக்குடி கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு சென்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த கைதை கண்டித்து கட்சியினர் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
வேல்முருகன் கைது செய்யப்பட்டதை தாங்கிகொள்ள முடியாமல் மன உலைச்சலில் சிதம்பரம் அருகே பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்த ஜெகன்சிங் (34), பி.முட்லூர் கிராமத்தை சேர்ந்த மன்சூர்அலி ஆகியோர் உடலில் மண்ணெண்னை ஊற்றிகொண்டு தீக்குளித்து இறந்தனர்.
இவர்கள் இறந்த போது சிறையில் இருந்தால் இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாததால் செவ்வாயன்று தீக்குளித்து இறந்துபோன தொண்டர்களின் வீட்டுக்கு வந்து அவர்களின் படத்திற்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் வழங்கினார்.
பின்னர் இதுகுறித்து செய்திளார்களிடம் பேசுகையில், தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறேன். அதனால் என்னை நசுக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தனர். அதனால் மனஉலைச்சல் அடைந்து இரு தொண்டர்கள் தன்னையே மாய்த்துக்கொண்டனர். தொண்டர்கள் யாரும் இதுபோன்ற தீய செயல்களில் ஈடுபடகூடாது என்று இரு கரம் கூப்பி கேட்டுகொண்டார். நாம் எந்த பிரச்சணையாக இருந்தாலும் போராடி தான் வெற்றிபெற வேண்டும்.
8 வழிச்சாலை தமிழகத்தின் கனிம வளங்களை கொள்ளையடித்து வெளிநாட்டிற்கு விரைவாக எடுத்து செல்லவே அமைக்கப்படுகிறது. இந்த சாலைகள் அமைத்தால் 40 சதவீத கமிசன் எடப்பாடிக்கு கிடைக்கும். ரூ10 ஆயிரம் கோடியில் ரூ 4 ஆயிரம் கோடி எடப்பாடிக்கு கிடைக்கும். அப்படி கிடைக்கபெற்ற பணம் தான் கடந்த இரு நாட்களாக நடந்த ரெய்டில் 100 கிலோ தங்கம், ரூ 110 கோடிக்கு மேற்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சரின் பினாமி சொத்து என சர்ச்சை எழுந்துள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் . சிதம்பரம் பகுதியில் 60 ஆண்டுகளாக வாழ்ந்த மக்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக ஆக்கியுள்ளனர். வீடு இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களுக்கு மாற்று இடம் அமைத்து தரவேண்டும் என்றார்.