Skip to main content

சுனாமி வரிசையில் கீழடியை பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்பே படத்தில் பேசிய கமல்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019


கடந்த 2000ம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஹே ராம். பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்த படம் கமலின் முக்கியமான படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது. அந்த படத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளராக கமல் நடித்திருப்பார். அதில் ஒரு காட்சியில் கமலிடம் ஷாரூக்கான் " இந்த நாகரீகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னால் தோன்றியது. மக்களாட்சியை முன்வைத்த நாகரீகம். குழந்தைகள் விளையாட பொம்மை செய்த நாகரீகம். நம்மளை போல் பெரியவர்கள் விளையாட ஆளுக்கொரு சாமி வேண்டும் என நினைத்த நாகரீகம் அல்ல" என்று சொல்வார்.


இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கீழடியில் கடவுள குறித்த ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதோடு அது சிந்து சமவெளி நாகரிகத்தோடு பல வகைகளில் ஒத்து போகிறது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே சிந்து சமவெளி குறித்த கமல் படத்தில் வரும் வசனம், தற்போதைய கீழடி ஆராய்ச்சியிலும் ஒத்து போகிறது. 2004ல் சுனாமி ஏற்படும் முன்னரே தனது அன்பே சிவம் படத்தில் அதுகுறித்த ஒரு வசனம் வைத்திருப்பார் கமல். 
 

 

சார்ந்த செய்திகள்