Published on 19/06/2019 | Edited on 19/06/2019
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது மேற்கு வங்காளத்தில் பாஜக ஜெய் ஸ்ரீராம் முழக்கத்தை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதற்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி ஜெய் காளி என்கிற கோஷத்தை வெளிப்படுத்தி பிரச்சாரம் செய்தார். நேற்றைய தினம் தமிழக எம்.பி.க்கள் பதவி ஏற்கும் போது தமிழ் மொழியில் பதவி ஏற்று கொண்டனர்.பதவி ஏற்கும் போது அனைவரும் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என்று கூறினார்கள். அப்போது பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்தை எழுப்பினார்கள்.
TAG2 ---------------------------
பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் என இந்துத்துவா கொள்கையை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதுவரை முழங்கி வந்தனர்.ஆனால் தற்போது இவர்களது முழக்கம் ஒற்றை இந்தியாவின் முழக்கமா? மாநிலங்களுக்கு எதிரானதா? என்ற கேள்வி அனைத்து மாநிலங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதே போல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவைசி எம்.பி பதவி ஏற்கும் போதும் பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என்றும் ஜெய் ஸ்ரீராம் என்றும் முழக்கமிட்டனர்.