Skip to main content

''இரட்டை இலை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும்'' - டி.டி.வி.தினகரன் பேட்டி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

"If there is no double leaf, it will be worse" - DTV Dinakaran interview

 

பல்வேறு பரபரப்புகளை கடந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 

ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்கு வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம். பழனிசாமியின் ஆணவம், திமிர் தான் தோல்விக்கு காரணம். இரட்டை இலை இல்லையென்றால் இன்னும் மோசமாகி இருக்கும். கடந்த காலத்தில் ஒன்றிய அரசில் இருந்தவர்களால் தான் பழனிசாமி ஆட்சி காப்பாற்றப்பட்டு வந்தது. எவ்வளவோ பணம் செலவு செய்தும் பொருட்களை செலவு செய்தும் எடப்பாடியால் வெற்றி பெற முடியவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்