Published on 18/09/2019 | Edited on 18/09/2019
கடந்த மாதம் 21-ம் தேதி ப.சிதம்பரம் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை 14 நாட்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் எதிர் கட்சி தலைவர்களில் ஒருவர் கைதாகிறார் என்று எச்.ராஜா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசும் போது, "பொய்களையே பேசி,தமிழை அழிக்க திராவிடம் என்ற வார்த்தையை கண்டுபிடித்த ஒரு கூட்டம் 20ஆம் தேதி ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என சொல்லியிருப்பது தமிழக மக்களை, தமிழ் உணர்வாளர்களை ஏமாற்றும் செயலாகும். அதை பாஜக கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தமிழகத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவர் விரைவில் கைதாவார்" என்று எச்.ராஜா கூறியுள்ளார். இதற்கு முன்பு புதுக்கோட்டையில் பேசும் போது, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைப் போன்று, தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாக உள்ளார். தி.மு.க தனது இலவச இணைப்பில் உள்ள இரு கட்சிகளைக் கழற்றிவிட்டால், அது அவர்களுக்கு நல்லது" என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.