தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள், ஆளும் கட்சியின் ஆதரவுடன் தடையின்றி கடைகளில் புழங்குவதை அம்பலப்படுத்த, சட்டமன்றத்துக்குள் குட்கா பொருளை திமுகவினர் எடுத்துச் சென்று சபையில் காட்டினர்.
திமுகவின் இந்த செயல், சபைக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, இந்த விவகாரத்தை சபையின் உரிமைக்குழுக்கு அனுப்பி வைத்தார் சபாநாயகர் தனபால்.
இதனை பரிசீலித்த உரிமைக்கு முழு, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட18 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில், உரிமை குழுவின் நோட்டீசுக்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, இது குறித்து சபாநாயகரிடம் எடப்பாடி விவாதித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, குட்கா விவகாரத்தில், திமும எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமைக்குழு நோட்டிசுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சபாநாயகர் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
இது குறித்த நடவடிக்கைகளை சட்டப்பேரவை செயலகம் கவனிக்கத் துவங்கியிருப்பதாக கோட்டை வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.