Published on 19/08/2019 | Edited on 19/08/2019
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேலூர் வேட்பாளர் ஏ.சி.எஸ்., கூட் டணிக் கட்சியான பா.ஜ.க.வின் நடவடிக்கைகள்தான் தன் தோல்விக்கு காரணம்னு சொல்லிருந்தாரு. அதற்கு தமிழிசையும் வேலூரில் அதிமுக தோல்விக்கு பாஜக காரணம் இல்லை என்று பதில் அளித்துள்ளார். கூட்டணிக்குள் சலசலப்புகள் இருக்கத்தான் செய்யும். இந்த நிலையில் ஏ.சி.சண்முகம் நான் தோல்வி அடைந்ததற்கு பாஜகவை குறை சொல்லவில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டார். இது பற்றி விசாரித்த போது, உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. பாதி இடத்தை அ.தி.மு.க.விடம் எதிர்பார்க்குதாம்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் தன் ஷேரை விட்டுத் தர விரும்பலை. யாரை பலிகடாவாக்கலாம்னு பார்த்தப்ப, தே.மு.தி.க.தான் தெரிஞ்சிருக்கு. தே.மு. தி.க.வால் எந்த லாபத்தையும் உணர முடியலைன்னு எடப்பாடி உள்ளிட்டோர் கருதறாங்களாம். அதனால் கழற்றிவிடும் முடிவுக்கு அ.தி.மு.க. வந்திருக்குதாம். இதை விஜயகாந்த்தின் மைத்துனரான சுதீஷிடமே நாசுக்காகச் சொல்லிவிட்டதாம் அ.தி.மு.க.. இது தெரிஞ்சு அப்செட்டான பிரேமலதா, கட்சிக்கு ஏற்பட்ட இந்த சறுக்கல் வெளியில் தெரியாதபடி, வரும் ஆகஸ்ட் 25-ல் விஜயகாந்த்தின் பிறந்தநாளைக் கோலாகலமாகக் கொண்டாட முடிவெடுத்திருக்காராம். இருந்தாலும் தேமுதிவை அதிமுக கழட்டிவிடும் முடிவில் பின்வாங்கவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.