Skip to main content

“இது தொழில்நுட்பக் கோளாறில்லை, அரசியல் கோளாறு” - சு. வெங்கடேசன் எம்.பி. காட்டம்!

Published on 22/11/2024 | Edited on 22/11/2024
Su Venkatesan MP This is not a technical glitch it's a political glitch

இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தி மொழியில் செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளதாகவும், மீண்டும் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் எல்.ஐ.சி. நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எல்.ஐ.சி இணைய தள இந்தி பிரச்சனையில், ‘தொழில்நுட்பக் கோளாறு’ என்று எல்ஐசி விளக்கம் அளித்தது. எல்.ஐ.சி.யின் இணையதள மொழித் தெரிவில் இந்தி ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக மராத்தி சொருகப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்காக மராத்தியை நுழைக்க நடந்துள்ள ஏற்பாடு. இதனால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை. இது தொழில்நுட்பக் கோளாறில்லை. ஒன்றிய அரசின் நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட அரசியல் கோளாறு” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்