Skip to main content

பிஜேபிக்கு எதிராக களமிறங்கிய திமுக... ஆதரவாக 14 கட்சிகள்... அதிர்ச்சியில் பாஜக!

Published on 21/08/2019 | Edited on 21/08/2019

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் நீக்கி நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் எனவும் தெரிவித்தது. காஷ்மீர் மாநிலம் தொடர்பான அனைத்து மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், இந்திய குடியரசுத்தலைவரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கினார். இந்த நிலையில் இதற்கு எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வந்தனர். 

 

dmk



மேலும் காஷ்மீரில் உள்ள அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் மத்தியஅரசு வைத்துள்ளதற்கு பெரும் எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இதனையடுத்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் நாளை காலை 11.00 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடக்கும் என திமுக தலைமை அறிவித்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, திமுக நடத்தும் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் 14 கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்களின் ஆதரவினை திமுக தலைமைக்கு தெரிவித்துள்ளன. 


தி.மு.க. நடத்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ள 14 கட்சிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, புரட்சிகர சோசலிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்த தகவலால் பாஜக அரசு அதிர்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்