Skip to main content

சுதீஸ் என்னுடன் பேசினார், என்னவென்று கேட்டேன்... -துரைமுருகன்

Published on 06/03/2019 | Edited on 06/03/2019

 

duraimurugan




விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸ் என்னுடன் பேசினார். என்னவென்று கேட்டேன். நாங்கள் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி உங்களோடு வர விருப்பப்படுகிறோம்.  எங்களுக்கு நீங்கள் சீட் தரவேண்டும் எனக் கேட்டார். அதற்கு நான் எங்கள் தலைவர் ஊரில் இல்லை.  இரண்டாவது, சீட் கொடுப்பதற்கு எங்களிடம் சீட் இல்லை. எல்லோருக்கும் கொடுத்துவிட்டோம்.  ஆக நீங்கள் எங்களுடன் வருவதாகக் கூறினீர்கள், அதன்பின் அங்கே போகிறீர்கள் இப்படி செய்தால் நாங்கள் என்ன செய்வது, மன்னிக்கவேண்டும் எனக் கூறிவிட்டேன். 


வீட்டிற்கு வந்தபிறகு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் முருகேஷன் வந்திருந்தார்கள் அவரிடமும் நான் இதையேதான் கூறினேன். எங்களிடம் சீட் இல்லை, இப்போது வந்து என்ன பிரயோஜனம் எனக் கேட்டேன். ஏன் அங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் சரியானதாக தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தையில் ஜெகத்ரட்சகன்,  ராணிப்பேட்டை காந்தி உடனிருந்தனர். நான் தெளிவாக கூறிவிட்டேன், எங்களிடம் கொடுப்பதற்கு சீட் இல்லை என்று. சீட் கொடுப்பதற்கான அதிகாரம் என்னிடம் இல்லை, தலைவரிடம்தான் இருக்கிறது. எங்கள் தலைவரிடம் நான் கண்டிப்பாக விவாதிப்பேன். அவருக்கு ஃபோன் பண்ணேன் லைன் சரியாக கிடைக்கலை. இதற்கு அப்பாற்பட்டு இருக்கிறார் அப்படினு ஒரு பொண்ணு  சொல்லிட்டு இருக்கு. அதுக்கப்புறமும் தொடர்பு கொண்டேன், தூங்குகிறார் என்றார்கள். நான் பரவாயில்லை அது ஒன்றும் பெரிய அவசரம் இல்லை எழுப்ப வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நைட் வருவார் அவரிடம் பேசுவேன்.

 

 

சார்ந்த செய்திகள்