Skip to main content

திமுக செய்தி தொடர்பு செயலர் பொறுப்பிலிருந்து டி.கே.எஸ். விடுவிக்கப்பட்டார்

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
tks

 

திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் பொறுப்பிலிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

''நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என அதிமுக சொல்ல காரணமே இதுதான்''-டி.கே.எஸ் இளங்கோவன்

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

 "This is the reason why AIADMK said that assembly election will come along with parliamentary election"-TKS Ilangovan

 

'கொள்ளையடித்த  பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் பாஜகவினர். எனவே தான் அதிமுகவினர்  2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' என திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ''ஆட்சிக்கு ஆபத்து வருவதற்கான சட்ட ரீதியான எந்த காரணமும் இல்லை. பொம்மை வழக்கிலேயே உச்சநீதிமன்றமே ஆட்சியை கலைப்பது எளிதல்ல என்று கூறியுள்ளது. அதற்கு முன்னாலே மாநில அரசுகளின் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அந்த நிலை பொம்மை வழக்குக்கு பிறகு எந்த மாநிலத்திற்கும் ஏற்படவில்லை.

 

ஒரே ஒரு வழியை பாஜக பின்பற்றுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால் அதை கொள்ளைபுற வழியாக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்துக் கொண்டார்கள். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் அந்த மாநில மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள் அங்கேயும் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள்.

 

ஜனநாயக முறை என்பது மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் ஆட்சி நடத்த வேண்டும். அந்த ஜனநாயகத்தை கொலை செய்யும் வகையில் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஆட்சியை மாற்றி அமைத்தது பாஜக என்பது வரலாறு. அந்த வகையில் பாஜக எதையும் செய்ய துணிந்தவர்களாக, அரசியல் சட்டத்தை மீறத் துணிந்தவர்களாக, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் புறக்கணிக்கத் துணிந்தவர்களாக அவர்கள் மாறி விட்டார்கள். எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், எப்படியாவது மறைமுகமாகவாவது கோடி கணக்கில் கொள்ளையடித்த  பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே தான் அவர்களின் அடிவருடிகளான அதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

 

Next Story

"அவரே மூன்றாவது முறை தமிழகம் வர திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்; இப்ப போய் பாதுகாப்பு சரியில்லையாம்" - டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

 'The Prime Minister is planning to come to Tamil Nadu for the third time; does it mean that the security is not good now?'- DKS Elangovan interview

 

திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அண்மையில் திமுகவின் பொதுக்குழு நடந்திருந்த நிலையில் பொதுக்குழுவை அடுத்து முதன்முறையாக கூட்டப்பட்ட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என்ற நிலையில் இது முக்கியத்துவம் பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னெடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

 

இந்நிலையில், கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், ''ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் முறையில் முடிந்து. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இது பேராசிரியர் நூற்றாண்டு விழா குறித்த கூட்டமாக இருந்தது. கொள்கைகளைக் கொண்டுபோய் சேர்ப்பது, மாணவர்களை; இளைஞர்களை ஊக்கப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பேராசிரியர் எந்த லட்சியத்தோடு பாடுபட்டாரோ, அந்த லட்சியம் இன்றைக்கும் தேவைப்படுகிற லட்சியமாக இருக்கின்ற நிலையில், எதிரிகள் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லி வருகின்றனர். அதனால் லட்சியங்களை, கொள்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவது எப்படி என்று ஆலோசிக்கப்பட்டது.

 

பிரதமர் இங்கு வந்து பார்த்துவிட்டு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு டெல்லி போய் விட்டு அதன் பிறகு பிறகும் தமிழகம் வந்துவிட்டு மீண்டும் ஒருமுறை தமிழகம் வருவதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இப்ப போய் அன்னைக்கு பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் அவர் ஒரு போலீஸ் ஆபீஸரா? பிரதமர் பாதுகாப்பு என்றால் டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் இங்கே வந்து பாதுகாப்பு பணிகளை எல்லாம் மேற்பார்வையிட்டு குறை இருந்தால் சொல்லி சரி செய்து விடுவார்கள். பிரதமர் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து விடுவார்கள். எல்லாம் முடிந்த பிறகு பிரதமருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு சரியில்லை என்று சொன்னால் டெல்லியில் உள்ள பிரதமருடைய பாதுகாப்பு படையினர் ஏதாவது தப்பு செய்துவிட்டார்கள் என்று சொல்கிறாரா? நான் நேற்று வேடிக்கையாக சொன்னது போன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேல ஏதாவது வருத்தம் இருக்கிறதா? என்று எனக்கு புரியவில்லை'' என்றார்.