Skip to main content

திமுக கேள்விக்கு அதிரடி பதில் கொடுத்த அதிமுக அமைச்சர்!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

சட்டமன்ற கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர். மேலும் மாநில அரசு மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கிறது என்று எதிர் கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தனர். 
 

admk



இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய அமைச்சர் சிவி சண்முகம், " ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு அனுமதி இல்லாமல், மத்திய அரசு செயல்படுத்த முன் வந்தால் நிச்சயமாக கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கும், சட்டத்தில் இடம் இருக்கிறது. தற்போது வரை மாநில அரசு எந்த திட்டத்திற்கும், அனுமதி கொடுக்கவில்லை. ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால், மாநில அரசின் அனுமதியை மத்திய அரசு கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கவில்லை எனில் அந்த திட்டம் ஒரு போதும் அனுமதிக்கப்படாது." என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். மேலும், "அவ்வாறு அமல்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முழு உரிமை இருக்கின்றது" என கவன ஈர்ப்பு தீர்மானத்தில்  தெரிவித்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்