Skip to main content

அ.தி.மு.க முன்னாள் அமைச்சருக்கு வந்த சிக்கல்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி நடவடிக்கை!

Published on 21/09/2024 | Edited on 21/09/2024
Anti-bribery action on ADMK ex-minister's R.vaithilingam

லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில், கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை என அ.தி.மு.க ஆட்சி நடைபெற்று வந்தது. இதில், 2011 ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் வீட்டு வசதி வாரிய அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 2015 -2016 காலகட்டத்தில் பிரபல நிறுவனத்தின் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அறப்போர் இயக்கம் அளித்த அந்த புகாரின் பேரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மட்டுமில்லாது அவரது இரண்டு மகன்கள், மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்