தேசிய குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க. கூட்டணி ஒரு பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்துள்ளது. இது பாஜக அரசிற்கும், அதிமுகவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 2 கோடி பேரின் கையெழுத்துக்களை தி.மு.க. தரப்பு வாங்கியிருப்பதாக சொல்கின்றனர். அறிவாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்த கையெழுத்துப் பண்டல்களை திமுகவின் கூட்டணி எம்.பி.க்களுடன் சேர்ந்து வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ளதாக சொல்கின்றனர்.
மேலும் தி.மு.க.வின் இந்த கையெழுத்து இயக்கம் எப்படி நடந்தது என்று கண்காணிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உளவுத்துறைக்கும், கட்சியினருக்கும் உத்தரவு போட்டுள்ளதாக சொல்கின்றனர். இது தொடர்பாக அமித்ஷாவுக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கும் மத்திய உளவுத் துறை, கையெழுத்து பெறப்படுகிறவர்களின் முகவரியோ, வேறு அடையாளங்களோ அந்தப் படிவத்தில் இல்லை என்று கூறியிருக்கிறார்கள். ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கும் இந்த 2 கோடி கையெழுத்துக்களால் என்ன பலன் ஏற்பட்டுவிடப்போகுதுங்கிற கேள்வியும் பாஜகவினர் பேசி வருகின்றனர்.