Published on 25/06/2019 | Edited on 25/06/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. இதில் தேமுதிகவுக்கு 4 இடங்களில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக படுதோல்வி அடைந்தது. தேமுதிக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளராகளுக்கு கட்சி தலைமையிடம் இருந்து தேர்தல் செலவுக்கு நிதி கொடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி தலைமையையிடம் இருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை என்ற குமுறலும் இருந்தது. கடந்த வாரத்தில் விஜயகாந்தின் வீடு மற்றும் கல்லூரி ஏலம் வருவதாக வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனையில் மாவட்ட நிர்வாகிகளிடம் ஏலம் போகும் சொத்துக்காக நிதி கேட்பதாக தகவல் வெளியானது. இது தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்த தலைமை மீது கடுப்பில் இருந்த நிர்வாகிகளுக்கு நேற்று நடந்த நிகழ்வும் பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது. இதனால் தேமுதிக நிர்வாகிகள் பலரும் மாற்று கட்சிக்கு போக தயாராகிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.