சட்டப்பேரவைத் தேர்தல் வர உள்ள நிலையில் கோவையில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கில் அம்மாவட்டத்தை கட்சி ரீதியாக ஐந்து மாவட்டமாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களை திமுக தலைமை நியமித்துள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நிரவ்க வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகள் அமைக்கப்படுகிறது.
கோவை வடக்கு மாவட்டம்
111. மேட்டுப்பாளையம்
119 தொண்டாமுத்தூர்
கோவை தெற்கு மாவட்டம்
123 பொள்ளாச்சி
124 வால்பாறை (தனி)
கோவை கிழக்கு மாவட்டம்
116 சூலூர்
122 கிணத்துக்கடவு
கோவை மாநகர் கிழக்கு மாவட்டம்
120 கோவை தெற்கு
121 சிங்காநல்லூர்
கோவை மாநகர் மேற்கு மாவட்டம்
117 கவுண்டம்பாளையம்
118 கோவை வடக்கு
இவ்வாறு பிரிக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை கிழக்கு, கோவை மாநகர் கிழக்கு, கோவை மாநகர் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.
புதிதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக சி.ஆர்.இராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக எஸ்.சேனாதிபதி, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நா.கார்த்திக், கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பையா (எ) ஆர்.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.