Published on 08/07/2019 | Edited on 08/07/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. இதில் பாமகவிற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கியது. பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. பாமகவின் ஸ்டார் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் ஏற்கனவே தர்மபுரி தொகுதியில் எம்.பி.யாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மேலும் தர்மபுரி எம்.பி. தொகுதிக்குள் அடங்கிய மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நகர செயலாளர் சந்திரசேகர் அ.தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதனால் தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் மூன்று எம்.பி.க்கள் கிடைக்க உள்ளதாக திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். அதோடு, நாங்கள் மூன்று பெரும் சேர்ந்து தருமபுரி மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.