மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு சென்று படிப்பது என்பது இப்போது யாருமே முடிவெடுக்க முடியாது என்று அந்த துறையின் அமைச்சரான செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.
ஈரோட்டில் சனிக்கிழமை காவலர் உணவகத்தை திறந்து வைத்து விட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "வருகிற 17 ஆம் தேதி நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஈரோட்டுக்கு வருகிறார். அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் முடிக்கப்பட்ட திட்ட பணிகளை திறந்துவைக்கிறார். மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை ஆய்வும் செய்கிறார்" என கூறியவர் தொடர்ந்து பேசுகையில், "அரசுப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் பணியை வருகிற 14 ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு புத்தகப்பையுடன் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்படும். அதனை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தல் பணி தொடங்க உள்ளது. மடிக்கணினியில் பிரத்யேக செயலி மூலம் கற்பித்தல் பணி நடைபெறும். இதனையும் முதல்வர் வருகிற 14 ஆம் தேதி தொடங்கிவைக்கிறார்.
பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து, இதற்காக அமைகப்பட்ட குழுவின் அறிக்கை வந்த பிறகுதான் மேலும் முதல்வரின் ஆலோசனை பெற்று முடிவு மேற்கொள்ளப்படும்.பள்ளிகள் திறப்பு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. கல்வி கட்டடணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளில் தனியார் பள்ளிகள் அனுமதிப்பதில்லை என்ற கேள்விகளுக்கு ஓரிரு நாள்களில் இதற்கான வரைமுறைகள் அறிவிக்கப்படும். தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் அனைத்து வகுப்புகளும் நடைபெறாது. முறைப்படி கால அட்டவணைப்படி தொலைக்காட்சிகளில் வகுப்புகள் நடத்தப்படும். இதனால் ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தாலும் எந்த சிக்கலும் ஏற்படாது." என்றார்.
கல்வித்துறை தொடர்ந்து குழப்பத்துறையாகவே நீடிக்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் முன்பே ர.ர.க்கள் கூறுகிறார்கள்.
.