Published on 18/02/2020 | Edited on 18/02/2020
![chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/aVxlQ5DEBEzH6zva1_9hvp8y2c7E2U0lQt6FLQXAZTo/1582019535/sites/default/files/inline-images/g55.jpg)
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நாளாவது நாளாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று இரவு மகாத்மா காந்தியின் பேரன் துசார் காந்தி வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் சாகீன்பாக் போராட்டத்தைப் போன்று அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.