Published on 28/06/2022 | Edited on 28/06/2022

கடந்த 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் சென்னை வானகரத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிலையில், இந்தக் கூட்டத்தை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கடந்த 18ஆம் தேதியன்று ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின்போது வெளியே திரண்டிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளரான மாரிமுத்து என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில், மாரிமுத்துவுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் மாரிமுத்து புகாரளித்தார்.
மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.