சமீபத்தில் பா.ஜக. பக்கம் சாய்ந்த சசிகலா புஷ்பாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, சசிகலா புஷ்பா அ.தி.மு.க.வில் இருந்த போது, அவர் சம்பந்தப்பட்ட படங்களை, எதிர்க்கட்சிப் பிரமுகர்களோடு அவர் நெருக்கம் பாராட்டுவதை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசி வந்தனர். இந்தப் படங்கள் பிறகு சமூக ஊடகங்களில் வலம்வந்து மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனால், சம்மந்தப்பட்ட அந்தப் படங்கள் எல்லாம் மார்பிங் செய்யப்பட்டவை என்றும், அவற்றை சமூக ஊடகங்கள் உடனடியாகத் நீக்கவேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சகாய் என்ட்லா, இப்போது அதிரடித் தீர்ப்பை அறிவித்துள்ளார். அதில் அந்தப் படங்கள் எல்லாம் உண்மையானவை என்று உறுதிப்படுத்திச் சொல்லியிருப்பதோடு, மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்களின் மறுபக்கத்தைத் தெரிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்றும் உத்தரவிட்டு அபராதத்தோடு சசிகலா புஷ்பாவை நீதிபதி கண்டித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.