அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கின்றது.
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தீர்ப்பு வந்ததை அடுத்து கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று தேனி பெரியகுளத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த அதிமுக தொண்டர்களும் அவரின் வீட்டின் முன் குவிந்தனர்.
தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிந்து சென்னை செல்ல ஆயத்தமான போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அதிமுக சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என கூறினார்.
மேலும் ஜூலை 11ல் நடந்த இரண்டாவது அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.