Skip to main content

தமிழகத்தில் காங்கிரஸ் பாணியில் பாஜக தலைவரை நியமிக்க திட்டம்? அதிர்ச்சி கொடுக்கும் அமித்ஷா!

Published on 04/09/2019 | Edited on 04/09/2019

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசையை தெலுங்கானா ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்கிறார் முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இதனால் அடுத்த தலைவரை நியமிக்க பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை அறிவித்த போது, ஒரு தலைவர் மற்றும் நான்கு செயல் தலைவர்களை நியமனம் செய்தது. 
 

bjp



தற்போது பாஜகவிலும் இதே சூழல் உருவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, பாஜகவை தமிழகத்தில் வலுப்படுத்த மண்டலம் வாரியாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தலைவரை நியமிக்க பாஜக தலைமை ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கொங்கு மண்டலம், தென் தமிழகம், வட தமிழகம் என பிரித்து மண்டலத்திற்கு ஒரு செயல் தலைவரை நியமிக்கலாம் என்றும் பாஜக தலைமை முடிவெடுக்கலாம் என்று அரசியல் தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவி கனவில் இருக்கும் பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதே போல் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர்.  

சார்ந்த செய்திகள்