Published on 11/03/2021 | Edited on 11/03/2021
அருப்புக்கோட்டை தொகுதியின் அதிமுக வேட்பாளராக வைகைச்செல்வன் களமிறங்கியிருக்கிறார். கூடியமட்டிலும் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆரே அறிவிக்கப்படுவார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் அருப்புக்கோட்டை வேட்பாளராக உமாதேவியை அறிவித்துள்ளனர். அக்கட்சியில் மாநில பொதுச்செயலாளர் பதவி வகிக்கும் உமாதேவி, அருப்புக்கோட்டையில் ‘ஸ்ரீஜெயவிலாஸ்’ என்ற பெயரில் இயங்கிவரும் பிரபல டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஆவார். இந்நிறுவனத்தில், அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
கணிசமான வாக்குகளைக் கவரும் வேட்பாளராக உமாதேவி இருப்பதால், வாக்கு வங்கியில் சேதாரம் என்பது திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால், பெரிய கட்சிகள் இரண்டும் கலக்கத்தில் உள்ளன.