Skip to main content
Breaking News
Breaking

மோடி படத்தை போட்டு மக்களிடம் ஓட்டு கேட்க அதிமுகவினர் தயாரா - செந்தில்பாலாஜி பிரச்சாரம்!

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேலாயுபாளையம் பகுதியில் ஓட்டுகேட்டு பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து, ஆளும் கட்சியினர் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்பதற்கு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் என்னை திட்டியே ஓட்டு கேட்கிறார்கள். திமுக ஆட்சி அமைத்தவுடன் புகளுர் நகராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்படும் வேலாயுதபாளையத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். இந்த பகுதியில் பாசன வாய்க்கால்கள் அனைத்தும் தூர் வாரப்படும். திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றார்.

 

senthilbalaji

 

மேலும் அவர், கரூர் எம்.பி. தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எனக்காக ஓட்டுகேட்டு என்னுடன் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேபோல நாங்கள் ராகுல்காந்தியின் படத்துடன் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறோம். ஆனால், அதிமுக எம்.பி. வேட்பாளர் சட்டசபை வேட்பாளாருக்கு ஓட்டு கேட்க வரவில்லை, அவர் எங்கே போனார். மோடி படம் என்னாச்சு, மோடி படத்தை போட்டு மக்களிடம் ஓட்டு கேட்க அதிமுகவினர் தயாரா என்பதை சொல்லுங்கள் என்று அதிமுகவினருக்கு சவால் விட்டு பேசினார். 
 

ஏற்கனவே அதிமுக கரூர் எம்.பி. தொகுதி வேட்பாளர் தம்பிதுரை இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தால் எல்லா இடங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் அவரை பிரச்சாரத்திற்கு வர வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடியே தலையிட்டு நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்