Skip to main content

அமித்ஷா பதவி விலக வேண்டும்... விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அதிரடி கருத்து!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணிகள் நடத்தினர். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச்சொத்துக்கள் தீவைக்கப்பட்டன. டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 
 

vck

 


இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், டெல்லி கலவரம் - 7 பேர் சாவு! அமித்ஷா பதவி விலகவேண்டும்! காவல்துறை அதிகாரத்தை டெல்லி அரசிடம் ஒப்படைக்க வேண்டும்! என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துவதாக கூறியுள்ளார். அதோடு டெல்லி கலவரம் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்