நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி சர்ச்சை ஏற்படும் வகையில் கருத்து தெரிவிப்பார். சில நாட்களுக்கு முன்பு இந்து கோவில்கள் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைப் பற்றி சர்ச்சை ஏற்படும் வகையில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும் என்று தெரிவித்து இருந்தனர்.
சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஒநாய் அழுவுது.
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) December 10, 2019
இந்த மசோதாவிற்கு மக்களவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஒநாய் அழுவுது என்று கூறியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.