வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகருக்கு ஜனவரி 19 ந்தேதி கட்சி நிர்வாகிகளை சந்திக்க வந்தார் கட்சியின் மூத்த தலைவரும், முன்னால் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன். கட்சி நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அப்போது, ’’சயன் கொடநாடு சம்பந்தமாக நடைபெற்ற ஐந்துக்கும் மேற்பட்ட கொலைகளில் முதலமைச்சர் பழனிசாமிக்கு முக்கிய பங்கு உண்டு, அவர் சொல்லித்தான் நாங்கள் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று அந்த பங்களாவில் உள்ள ஆவணங்கள் எல்லாம் எடுத்து வந்தோம் என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
முதலமைச்சர் பழனிசாமி மீது கொலைக்குற்றம் என்பது இது முதல் முறை கிடையாது. முதல்வர் பழனிசாமி என்பவர் சாதாரண சக்கரை மூட்டை பழனிச்சாமி ஆக இருக்கும் போதே அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. ஆகவே இந்த முறை கொடநாடு எஸ்டேட் சம்பந்தமாக கிட்டத்தட்ட 5 கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். பழனிச்சாமி அவர்கள்தான் தூண்டுகோல் என்று சொல்லும்போது உடனடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்து முடிந்தால் நிரபராதி என்று நிரூபித்து வரவேண்டும். இல்லையென்றால் மத்திய அரசாங்கம் கவர்னரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு நல்ல முயற்சி மதசார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக மோடி மதவெறி பிடித்தவராக மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து பெரிய முயற்சி எடுத்து இருக்கின்றனர். முயற்சியின் பலனாக கொல்கத்தாவின் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் உட்பட திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களும் பேசியிருக்கின்றார்கள், இது நல்ல தொடக்கம் என்று நினைக்கிறேன். தேர்தல் வருவதற்குள் இது ஒரு வலிமையான கூட்டணி என்று நான் நினைக்கிறேன்.
பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் பற்றி சொல்வதற்கு ஒன்றும் கிடையாது. ஏனென்றால் சொல்லி வைத்தார் போல் எல்லா தலைவர்களும் எல்லா மக்களும் தாமரை தமிழகத்தில் மலராது என்று சொல்லிவருகின்றனர். இந்நிலையில் அவர்கள் உண்மை என்னவென்று தெரியாமல், சூரியனை பார்த்து நாய் குரைப்பது போல பாஜகவினர் காங்கிரசை பார்த்து குறைத்து வருகின்றனர்’’ என்றார்.