Published on 10/04/2018 | Edited on 10/04/2018

இராமநாதபுரம் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மதநல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக திருப்புல்லாணி ஊராட்சி கிராமத்திற்கு உட்பட்ட வேளானூர் கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை மேம்பாட்டு வசதிக்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் பரிசுத்தொகை 10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். இதன்மூலமாக அக்கிராமத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூட கட்டிடம் சீர் செய்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம் என்றார்.