வருகிற 19ஆம் தேதி தமிழக்தில் அரவக்குறிச்சி,சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் திமுக சூலூர் தொகுதி வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசுகையில் தி.மு.க., ஆட்சியில் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும் என்று உறுதியளித்தார்.
அப்போது அந்த தொகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில், மழைக்காலங்களில், தண்ணீர் புகுந்து விடுவதால், சிரமம் ஏற்படுகிறது. இதனால், தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்; பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கலங்கல் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதற்கு பதிலளித்த ஸ்டாலின் மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தீர்வு காணப்படும். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, எம்.எல்.ஏ.,க்கள் மக்களை தேடி சென்று குறைகளை கேட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.பின்பு பிரச்சாரத்தின் போது சுற்றி உள்ள கிராம பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார் அப்போது மக்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டு அறிந்தார்.