பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும் எடப்பாடி பழனிச்சாமி மாதிரி தேர்தல் நிலவரம் பற்றி தனது கட்சிகாரர்களிடம் தேர்தல் வேலைகள் பத்தி விசாரிச்சிருக்கார். அப்போது கட்சிப் பிரமுகர்கள் பலரும், நாம களமிறங்கிய 7 தொகுதிகள்லயும் ஓட்டுப்பதிவு நடந்த சமயத்தில் மதியம் 3 மணிக்கு மேல், பல பூத்களிலும் எதிர்க்கட்சி ஏஜெண்டுகள் இல்லை. ஒரு சில இடங்களில் நாங்களே மெதுவா அவங்களை அனுப்பி வச்சிட்டோம். ஆனா பூத் ஆபீசர்களா வந்த அரசு ஊழியர்களை சமாளிக்கிறது தான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு சொல்லியிருக்காங்க.
இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, இந்தமுறை அதிகாரிகளின் மனநிலையே வேறமாதிரி மாறிவிட்டதாக கூறினர்.அரசு ஊழியர் சங்கங்களின் பிரமுகர்கள், தங்கள் தேர்தல் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகிட்டனர், எல்லா வகையிலும் நம்மை நசுக்கிய ஆளும் கட்சிக்கு நாம் பாடம் புகட்டணும்னு நினைச்சோம். வாக்குப்பதிவில், ஆளுந்தரப்பின் முறைகேடு நடவடிக்கைகளை முடிஞ்ச அளவு தடுத்துட்டோம். சாயங்காலம் 6 மணிக்கு மேல் கட்சியோட பூத் ஏஜெண்டுகள் வீட்டுக்குப் போறதிலேயே கவனமா இருந்தாலும், நம்மளால முடிஞ்ச அளவுக்கு எதிர்ப்புணர்வைக் கொஞ்சம் கொஞ்சம் பதிவு செஞ்சிட்டோம்னு சொல்லிச் சிரிச்சிருக்காங்க.
இதெல்லாம் எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்கு. அதனால் ரெண்டு நாளைக்கு முன், அரசு ஊழியர்களுக்கு மூன்று சத அகவிலைப்படி கொடுப்பது பற்றி, நிதித்துறைச் செயலாளர் சண்முகம், அவர்கிட்ட ஆலோசிச்சப்ப, அரசு ஊழியர்கள் தி.மு.க.வுக்குத்தானே ஓட்டுப் போட்டிருப்பாங்க. அப்புறம் எதுக்கு நம்மகிட்ட அகவிலைப் படியை கேட்கணும்னு எரிஞ்சி விழுந்ததாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.