Skip to main content

கரோனா விழிப்புணர்வுக்காக பைக்கை காராக மாற்றிய இளைஞர்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
c



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 31,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் உலக நாடுகள் பலவும் கரோனா குறித்து தங்கள் நாட்டு மக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.  இந்திய அரசும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒடிஷாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரோனா தொடர்பாக புதிய முயற்சி ஒன்றை பொதுமக்களுக்காக தொடங்கியுள்ளார். பிரோமோத் முதலி என்ற அந்த இளைஞர் வடிவமைப்பாளராக இருந்து வருகிறார், இவர் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு கார், இருசக்கர வாகனங்களை வடிவமைத்து தருகிறார். இந்நிலையில் கரோனா பற்றி மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் கரோனா வடிவில் தனது இருசக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளார். இந்த புதிய இருசக்கர வாகனம் பொதுமக்கள் பலரை கவர்ந்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு கரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்