மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உற்றபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சார கூட்டத்தில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய யோகி, "காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு பலமாக அலி இருந்தால், எங்களிடம் பஜ்ரங்பலி உள்ளார்’ எனத் தெரிவித்தார். உ.பி யில் இஸ்லாமியர்களை அலி என்றும், இந்துக்களை பஜ்ரங்பலி எனவும் குறிப்பிடும் பழக்கம் உள்ளதால், இதனை தான் யோகி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே நடந்த பிரச்சார கூட்டங்களில் மதவாதத்தை தூண்டுவது போல அவர் பேசுவதாக குற்றசாட்டு எழுந்து, அதற்கு தேர்தல் ஆணையம் அவருக்கு கண்டனமும் தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் அவர் இஸ்லாம், இந்து சமூகத்தை பற்றி மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியுள்ளது மீண்டும் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.