இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுக்க புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
எஸ்.பி.ஐ. வங்கியின் (SBI) அட்டையை ஏ.டி.எம்.யில் நுழைத்த பின் ரூபாய் 10,000- க்கும் அதிகமான தொகையை எடுக்க ஒருமுறைப் பயன்படுத்தக் கூடிய ஓடிபி எண் (OTP Number), வாடிக்கையாளரின் தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்படும். இந்த எண்ணை ஏடிஎம்-யில் உள்ளீடு செய்த பின்னர், அது சரிபார்க்கப்பட்டு, அதன் பிறகே பணம் எடுக்க முடியும். எஸ்.பி.ஐ. வங்கியின் கடன் அட்டைகளைத் திருடி, மோசடியாக பணம் எடுப்பதைத் தடுக்க இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இனி வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுடன் கூடிய போனை கையில் வைத்திருந்தால் மட்டுமே ரூபாய் 10,000- க்கும் அதிகமான தொகையை ஏடிஎம் மூலம் எடுக்க முடியும். இதர வங்கிகளிலும் விரைவில் இதேமுறையை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.