போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல பாஜக சார்பில் நாடு முழுவதும் சிஏஏ ஆதரவு பேரணிகளும், விளக்க கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் நடந்த பேரணியில் பேசிய யோகி ஆதித்யநாத், "போராட்டம் என்ற பெயரில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கு எதிராக தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்படும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இந்தியாவிற்கு எதிராக சதி செய்வர்களை கண்டு சகித்துக் கொண்டிருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.