Skip to main content

கொப்பரைத் தேங்காய்- குவிண்டாலுக்கு ரூ.375 உயர்வு!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Cabinet approves Minimum Support Price of Copra for 2021 season


டெல்லியில்,  மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (27/01/2021) காணொளி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் கூறுகின்றன.

 

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுற்றுச்சுழல், தகவல் மற்றும் ஒளிபரப்பு, கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  "சராசரி தரம் வாய்ந்த காய்ந்த கொப்பரைத் தேங்காய் கொள்முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 375 உயர்த்தித் தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நடப்பாண்டில் அரசு கொள்முதல் நிலையங்களில் கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையாக (Minimum Support Price- MSP) குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,335 வழங்கப்படும். முழு கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை கடந்த 2020- ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,300 ஆக இருந்தது. தற்போது, ரூபாய் 300 அதிகரிக்கப்பட்டு 2021- ஆம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 10,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்