இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில நீட் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயமாகும். இந்த தேர்விற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், நீட் தேர்வு குறித்து, அத்தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், மத்திய - மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்கள், நீட் தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்து நர்சிங் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. சிலர் இதுகுறித்து எதிர்ப்புகளை வெளிப்படுத்த தொடங்கினர்.
ஆனால், தேசிய தேர்வு முகமையின் அறிக்கையில், நர்சிங் படிப்புகளுக்கு நீட் தேர்வு முடிவுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதே தவிர, நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்படவில்லை.