![west bengal lockdown](http://image.nakkheeran.in/cdn/farfuture/9JUs3XkbXAkPY16bHMNTiKv2puGAP4tiFZuQdq7vc4Y/1621069318/sites/default/files/inline-images/New%20Project%20%283%29_1.jpg)
இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதியாகிவருகிறது. தினமும் கரோனாவால் பாதிக்கப்பட்ட, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். மேற்கு வங்க மாநிலத்திலும் கரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் நேற்று (14.05.2021) ஒரேநாளில் 20,846 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. மேலும், 136 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மேற்கு வங்கத்தில் நாளை முதல் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் காலை 7 மணியிலிருந்து 10 மணிவரை பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பேக்கரி கடைகளை மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பேருந்துகள் மற்றும் இரயில்களில் பயணம் செய்ய அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில்கள் போக்குவரத்து நாளை முதல் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.