Skip to main content

வரவேற்கிறேன்... ஆனால் இது போதாது... ப.சிதம்பரம் டுவிட் 

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் 4,86,702 என்ற எண்ணிக்கையிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17446 என்ற அளவிலும் இருக்கிறது. தற்பொழுது கரோனா தொற்றால் உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,020 ஆகும்.கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயினில் மட்டும் கரோனா வைரஸால் 1098 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்திருந்தார்.

 

 Welcome ... But this is not enough ... P. Chidambaram

 

 

இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான அரசின் திட்டத்தை கவனத்துடன் வரவேற்கிறேன் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை நான் வரவேற்கிறேன். மத்திய அரசின் அறிவிப்புகள் சில நான் முன்வைத்த 10 அம்ச திட்டங்களை பிரதிபலிக்கின்றன. திட்டத்தின் இரண்டாம் பகுதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என நம்புகிறேன். வரிக்கெடு, வங்கி தவணைகளை ஒத்தி வைப்பது, ஜிஎஸ்டி வரியை குறைப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்த அறிவிப்பு ஒரு அடக்கமான திட்டம். இது போதாது என்று விரைவில் அரசு உணரும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்.

 

 

சார்ந்த செய்திகள்