2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் முதல் மே மாதம் வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலின் போது ஈ.வி.எம் இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை அடுத்து, ஈ.வி.எம் இயந்திரத்துடன் விவிபாட் இயந்திரம் இணைக்கப்பட்டது. ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் மட்டும் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நாடுமுழுவதும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் பதிவான 1.25 கோடி வாக்குகள், விவிபாட் ஒப்புகைச்சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இவற்றில் மொத்தத்தில் 51 வாக்குகள் பொருந்தாமல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.