![gambhir](http://image.nakkheeran.in/cdn/farfuture/9Wzjq3th1CJYmYzB2ZIq8eqaXQtz_22rRkeONNZ5U3M/1550241650/sites/default/files/inline-images/gamber-wcc_0.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் போர்க்களத்தில் இருக்க வேண்டும். பொறுத்தது போதும்’’ என்று ஆவேசமாகக் தெரிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் முதலில் நேசித்து ராணுவப் பணியை. இப்போதும் ராணுவப் பணி மீது ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஒரே வருத்தம், என்னால் ராணுவத்தில் பணியாற்ற முடியவில்லை என்பதுதான்’’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.