சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் சென்று தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து, கேரளாவில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகளும், பல மத அமைப்புகளும், பாஜகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தனை தடைகளையும் மீறி கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் கேரளாவில் கலவரங்களும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற அனுமதிக்கு பின் சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவிக்கும் என்றும், மேலும் பல இளம் பெண்கள் சன்னிதானத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.
மேலும் கலவரத்தில் ஈடுபட்டதாக 3178 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். 37,979 பேர் மீது 1,286 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.