Published on 06/01/2021 | Edited on 06/01/2021

இங்கிலாந்தில் பரவி வந்த மரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்தியாவில் ஏற்கனவே 58 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதியான நிலையில், தற்போது மேலும் 13 பேருக்குப் புதியவகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றனர்.